ஜமீன் ஊத்துக்களி பேரூராட்சியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சப் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதி கிராம மக்கள் நேற்று சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இதில் 600க்கு அதிகமான ரேஷன் கார்டுதாரர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் வடுகபாளையம் பகுதியில் உள்ள இரண்டு ரேஷன் கடைகளுக்கும் மற்றும் கே.பி.எஸ் அருகே உள்ள ஒரு கடைக்கும் சென்று பொருள் வாங்குகிறார்கள். மேலும் ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள ஒரு கடைக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றார்கள்.
இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு முறையாக பொருள் கிடைப்பதற்கு காந்திநகர் பகுதியில் ஒரு ரேஷன் கடை அமைத்து தரவேண்டும். அதுமட்டுமில்லாமல் இப்பகுதியில் சமுதாய நலம்கூடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.