விவசாயி வீட்டின் பின்னால் இருந்த 40 அடி பழமையான கிணறு திடீரென உள்வாங்கியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தெற்கு குத்தகை பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு பின்னல் மிகவும் பழமையான 40 அடி ஆழமுடைய கிணறு ஒன்று இருந்தது.
இந்த கிணற்றின் மூலமாக இவர் தனது விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று திடீரென அந்த கிணறு நிலத்திற்குள் உள்வாங்கியுள்ளது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனையறிந்த கிராம மக்கள் உள்வாங்கிய கிணற்றை ஆச்சரித்ததுடன் பார்த்து சென்றனர்.