Categories
மாநில செய்திகள்

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது…. ஜே.இ.இ. விண்ணப்பத்தில் மதிப்பெண் குறிப்பிட வேண்டாம்…. அன்புமணி ராமதாஸ் வாழ்த்து….!!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு பாடத்திட்டத்தின் மூலம் படித்த 10-ஆம்  வகுப்பு மாணவர்கள் ஜே. இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் தங்களது மதிப்பெண்களை குறிப்பிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2020-2021 ஆண்டில் 10-ஆம்  வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாததால் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால் அப்போது மதிப்பெண்கள் குறிப்பிடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால்  நமது மாநிலத்தை சேர்ந்த மாணவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை.

இந்நிலையில் மாணவர்களின் இந்த சிக்கல் குறித்து நான் தமிழக அரசின் கவனத்திற்கும், தேசிய தேர்வு முகமை கவனத்திற்கும் கொண்டு சென்றேன். இதனையடுத்து நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் இதை சுட்டிக்காட்டி தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதனை ஏற்று மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் நுழைவு தேவை எழுதி வெற்றி பெறுவார்கள். மேலும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |