தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர், மார்க்சிய சிந்தனையாளர் இரா. ஜவஹர் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று காலமானார். இவரது “கம்யூனிசம் நேற்று இன்று நாளை”, ‘மகளிர் தினம் உண்மை வரலாறு’ஆகிய புத்தகங்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவரது மனைவி பேராசிரியர் பூரணம் கொரோனாவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “மார்க்சிய சிந்தனையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான தோழர் ஜவகர் அவர்கள், கொரோனா பாதிப்பால் பலியானார் என்னும் தகவல் மிகுந்த வேதனை அளிக்கிறது. தாங்கொணா வேதனை அளிக்கிறது” என்று எழுத்தாளர் ஜவகர் மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆழ்ந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழகம் ஒரு மகத்தான மார்க்சிய படைப்பாளரை இழந்து விட்டது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.