Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும்…. தூய்மை பணியாளர்கள் கோரிக்கை…. மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம்….!!

மிகை நேர ஊதியம் வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 76 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பணியாளர்களுக்கு கூடுதல் மிகை நேர பணிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து பணியாளர்களின் மிகை நேரப்பணி காலத்தை கணக்கிட்டு 4,000 ரூபாய் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரையிலும் இந்த தொகையை கொடுக்காததால் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக மிழக மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்செல்வி கூறியுள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Categories

Tech |