சரோஜினி நாயுடு கடந்த 1879 ஆம் வருடம் பிப்ரவரி 13ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் 2வது பெண் தலைவரும், உத்திரபிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரும் ஆக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரோஜினி நாயுடுவின் பிறந்தநாள் இந்தியாவில் தேசிய மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழக மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்றபோது அவருக்கு 12 வயதாகும். சரோஜினி கணித மேதை (அல்லது) விஞ்ஞானியாக வேண்டும் என்பது அவருடைய தந்தையின் ஆசையாகும்.
ஆனால் சரோஜினி நாயுடுக்கு கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் இருந்தது. இதனால் அவர் ஆங்கிலத்தில் கவிதை எழுத துவங்கினார். இதையடுத்து சரோஜினி நாயுடுவின் படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித்தொகை வழங்கினார். லண்டன் கிங்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் சரோஜினி படித்தார். உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி போன்ற மொழிகளை பேச சரோஜினி நாயுடு கற்றுக்கொண்டார். கவிதைகள் ஆங்கிலத்தில் இருப்பினும் அவற்றின் ஆன்மா இந்தியாவாகவே இருந்தது.
கடந்த 1905ஆம் வருடத்தில் வங்காளம் பிரிக்கப்பட்டதை அடுத்து சரோஜினி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார். கோபாலகிருஷ்ண கோகலே, ரபீந்திரநாத் தாகூர், முகமது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், காந்தி, நேரு போன்றோரின் அறிமுகத்தை சரோஜினி பெற்றார். பின் 1925 ஆம் வருடத்தில் சரோஜினி காங்கிரசின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி இவரை ஆவார். இதற்கிடையில் சரோஜினி அடிப்படையில் காந்தியின் வழியே கடைப்பிடித்தார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் பங்கேற்றார்.
ஜனவரி 26 1930ஆம் வருடம் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் கோரியது. அதன்பின் சில தினங்களிலேயே நாயுடு அவர்களும் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி மற்றும் பண்டிட் மாலவியாஜி போன்றவருடன் இணைந்து வட்டமேசை மாநாட்டில் அவர் பங்கேற்றார். அக்டோபர் 2, 1942ம் வருடம் அவர் வெள்ளையனை வெளியேறு போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டார். அவர் காந்தியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார்.
மோகன் தாஸ் காந்தி அவர்களுடன் சரோஜினிநாயுடு அவர்கள் ஒரு பாசமான உறவினை கொண்டிருந்தார். காந்தி, சரோஜினி நாயுடுவை செல்லமாக “மிக்கி மவுஸ்” என்று அழைப்பார். சென்ற 1947 ஆம் வருடம் மார்ச்மாதம் நடந்த ஆசிய உறவுகள் மாநாட்டில் சரோஜினி நாயுடு கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து 1947 ஆம் வருடம் ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் சரோஜினி நாயுடு உத்தரபிரதேச மாநில ஆளுநராக பதவி ஏற்றார். இதன் வாயிலாக அவர் இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் ஆனார். மார்ச்-2, 1949 ஆம் வருடம் மாரடைப்பு காரணமாக சரோஜினி நாயுடு இயற்கை எய்தினார்.