ஹொங்ஹொங் அரசு இந்தியா உட்பட 3 நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்திருக்கிறது.
ஹொங்ஹொங் அரசு வரும் ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை அறிவித்துள்ளது. ஹொங்ஹொங்கில் முதன் முதலாக N501Y covid-19 கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் 2 வாரங்களுக்கு இந்த தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் குறிப்பிட்ட மூன்று நாடுகளும் “மிக அதிக ஆபத்து” என்று வகைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த 3 நாடுகளிலிருந்து ஹொங்கொங்கிற்கு கடந்த 2 வாரங்களாக வந்த மக்களில் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதனால் இவ்வாறு வகைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் சுகாதார துறை இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஹொங்ஹொங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பதிவான 30 கொரோனா வழக்குகளில் சுமார் 29 நபர்கள் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.