சென்னையில் வரலாறு காணாத மழை வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகமெங்கும் மிக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று காலை வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 72 ஆண்டுகளில் மூன்றாவது பெரிய அளவிலான மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்அடுத்த 24 மணிநேரங்களுக்கு 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும் முன் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.