தென்மேற்கு பருவக்காற்று மழை காரணமாக தேனி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பெய்து வருகின்றது. இதனால் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும். மேலும் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.