நோக்கியோ டி20 டேப்லெட் முதலில் ஐரோப்பாவிலும் அதன் பிறகு இந்தியா உட்பட பிற சந்தைகளில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது நிறுவனத்தின் முதல் டேப்லெட். எச்எம்டி குளோபலின் கீழ் தற்போது அறிமுகமாகி உள்ளது. இது மலிவு விலையில், மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இதில் டிஸ்பிளேவை சுற்றி மெலிதான பெஸல்கள், எல்இடி ஃபிளாஷ் கொண்ட சிங்கிள் ரியர் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஓசோ ஆடியோ, பிளேபேக் மற்றும் விருப்பமான 4ஜி எல்டிஇ இணைப்பு ஆகிய அம்சங்கள்உள்ளன.
இது 10.4 இன்ச் 2 கே டிஸ்ப்ளே, யூனிசாக் டி 610 ப்ராசஸர், 8 எம்பி ப்ரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மற்றும் 8,200 எம்ஏஎச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. நோக்கியா டி20 டேப்லெட்டின் வைஃபை ஒன்லி தோராயமாக ரூ.17,200 க்கும் வைஃபை + 4 ஜி மாடல் சுமார் ரூ.20,600 க்கும் வாங்க முடியும். இதனை வரும் நாட்களில் ஐரோப்பாவில் வாங்க முடியும். இந்திய அறிமுகம் பற்றி நிறுவனம் இன்னும் எந்த தகவலையும் கூறவில்லை. ஆனால் இது விரைவில் வாங்க கிடைக்கும் என்று கூறப்படுகிறது..
நோக்கியா டி 20 டேப்லெட் அம்சங்கள்:
– மாலி-ஜி 52 ஜிபியு
– யுனிசாக் டி 610 ப்ராசஸர்
– 3 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி
– 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு
– ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-இல் இயங்கக்கூடிய UI
– 15W சார்ஜிங் ஆதரவு
– 8,200mAh பேட்டரி
– 10W சார்ஜர் என இன்னும் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன.