Categories
லைப் ஸ்டைல்

மிக சுவைமிக்க தேன்… எப்படி தயாரிக்கப்படுகிறது?…!!!

தேனீக்கள் தேனை எவ்வாறு தயாரிக்கின்றன என்பது பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

மனிதர்கள் அருந்தும் சுவைமிக்க பொருள்களில் ஒன்று தேன். அந்த சுவை மிக்க தேனை தேனீக்கள் எப்படி தயாரிக்கின்றன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். தேனீ, தனது டியூப் போன்ற நாக்கை நீட்டி மலரின் தேனை உறிஞ்சி சேமிக்க அதற்கென்று தனியான தேன் வயிறு வைத்திருக்கிறது. 70 மில்லி கிராம் தேனை சேமிக்க தேனீக்கள் 100 இலிருந்து 1000 மலர்களுக்கு செல்ல வேண்டும்.

இப்படி சேகரித்த தேனை வேலைக்காரத் தேனீக்களுக்கு மாற்றுகிறது. அந்த தேனிகள் அரை மணி நேரம் அதனை பதப்படுத்தி என்சைம்கள் சேர்த்து தேன் கூட்டில் அறையில் வைக்கின்றன. அதன்பிறகு இறக்கையால் விசிறி அந்த திரவத்தில் உள்ள நீரை குறைத்து கெட்டி தேனாக மாற்றுகின்றன.

Categories

Tech |