காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மோதிலால் வோரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மோதிலால் வோரா(93), கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று மதியம் உயிரிழந்தார். இவர் 1985 முதல் 1988 வரை மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருந்தார்.
அதன்பிறகு 1993 ஆம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை உத்திரபிரதேசத்தில் ஆளுநர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இவரின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நேற்று இவருக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.