தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் மயில்சாமி விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது மட்டுமன்றி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்து கட்சி வெளியிட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தாங்கள் கேட்ட தொகுதிகளை தடுக்காவிட்டால் அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அதனால் சற்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் மயில்சாமி விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் வெள்ளம் அந்த காலகட்டத்திலும் கொரோனா காலகட்டத்திலும் விருகம்பாக்கம் மக்களுக்கு சத்தமில்லாமல் பல உதவிகளை செய்தவர் ஆன மயில்சாமிக்கு அந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளதால் இவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.