மிகப் பிரபல கன்னட நடிகர் சத்யஜித் காலமானார். இவருக்கு வயது 72. இவர் அப்பு, அரசு, ஆப்தமித்ரா உள்ளிட்ட சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வில்லன் மற்றும் குணசித்திர உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து கன்னட சினிமாவின் சிறந்த துணை நடிகராக விளங்கியவர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories