Categories
தேசிய செய்திகள்

மிக மிக கனமழை… மும்பைக்கு ரெட்அலர்ட்… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால்  மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த பேய் மழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல நவிமும்பை, தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மும்பையில் மிகவும் கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மேலும் அம்மாநிலத்தில் சில பகுதிகளில் 20 சென்டிமீட்டர் அதிகமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ஜூலை 24-ஆம் தேதிக்கு பிறகு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |