Categories
உலக செய்திகள்

மிக மிக கேவலமாக திட்டிய மனைவி… பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு… பின் கணவன் செய்த பயங்கரம்..!!

தொடர்ந்து அவமானப்படுத்தி பேசிய மனைவியை கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சுவிட்சர்லாந்தின் சேனன் மண்டலத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனை தொடர்ந்து அவதூறாக பேசி வந்துள்ளார். இழிவானவன், மோசமானவர் ஒரே பாலின ஈர்ப்பாளன் என தொடர்ந்து அவமானப்படுத்தி வந்துள்ளார். ஆனால் அவரது கணவர் அமைதி காத்துள்ளார். சில நேரங்களில் தகராறு வேண்டாம் என வீட்டில் இருந்து வெளியேறி வந்துள்ளார். ஆனால் 2019 ஆம் வருடம் துக்க வெள்ளி அன்று பொறுமையை இழந்த கணவன் தனது மனைவியை மிகவும் கடுமையாக திட்டி இரும்பு கம்பி கொண்டு தனது கோபம் தீரும் வரை அடித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட காயத்தில் சம்பவ இடத்திலேயே அந்தப் பெண்மணி உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த கணவன் காவல்துறையினரை வரவழைத்து உண்மையை கூறி சரணடைந்துள்ளார். அதேநேரம் அதிகாரிகளிடம் அவர் தனது மனைவியை தண்டிக்க நினைத்ததாகவும் கொலை செய்யும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கில் செர்பிய நாட்டைச் சேர்ந்த கணவருக்கு 7 வருடம் சிறை தண்டனையும் 10 வருடங்கள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது.

ஐந்து பிள்ளைகள் இருந்தும் இவ்வளவு மோசமாக நடந்துகொண்ட தாயின் செயலை கண்டு தந்தைக்கே பிள்ளைகள் ஆதரவளித்துள்ளனர். தாயை விவாகரத்து செய்யவும் தந்தைக்கு அறிவுரை வழங்கினார். ஆனால் அதனை மறுத்த அந்த கணவர் இது குடும்ப மரபுக்கு முரணானது என தெரிவித்துள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |