புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் இன்று காலமானார்.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம். அந்த வகையில் மத்திய அரசு புதுவை அரசின் பரிந்துரையின்றி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்தது.
இதில் தற்போது சங்கர்(70) மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 3லிருந்து 2ஆக குறைந்துள்ளது. அவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.