மத்தியப் பிரதேச மாநிலத்தின் பள்ளிக் கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மரின் மருமகள் சவிதா பர்மர் (22) தற்கொலை செய்து கொண்டார். அமைச்சரின் மருமகள் தற்கொலைக்கு குடும்ப பிரச்சனை காரணம் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த தகவலை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
சவிதா பர்மரின் மரணத்தை உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் சவிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சவிதாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தர் சிங் பர்மாரின் மகன் தேவராஜ் சிங்குடன் திருமணம் நடந்தது
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முதற்கட்ட நடைமுறைகளை முடித்து, புதன்கிழமை காலை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.