காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்பியுமான அகமது படேல் (71) இன்று அதிகாலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார், இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். அவரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.