Categories
இந்திய சினிமா சினிமா

மிக முக்கிய பிரபலம்… திடீர் மரணம்… சோகம்…!!!

நாட்டுப்புற இசையில் முதல் கருப்பின சூப்பர் ஸ்டாரான பிரபல பாடகர் சார்லி பிரைட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போதும் உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால் அதற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் தற்போது வரை முக்கிய பிரபலங்கள், திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டுப்புற இசையில் முதல் கருப்பின சூப்பர் ஸ்டாரான பிரபல பாடகர் சார்லி பிரைட் (86) கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு, 2020 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். மேலும் 1970 ஆம் ஆண்டு நாட்டுப்புற இசையில் இவர் பாடிய ” kiss an Angel good mornin” and “is anybody goin” பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து.

Categories

Tech |