கூடைப்பந்து ஜாம்பவானாக கே.சி ஜோன்ஸ் உயிரிழந்துள்ளளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்து ஜாம்பவான் கே.சி ஜோன்ஸ்(88) காலமானார். 1958 முதல் 1967 வரை கூடைப்பந்து வீரராக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர் பயிற்சியாளராக பாஸ்டன் செல்டிக்ஸ் அணிக்காக இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
1956 ஆம் வருடம் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் 12 முறை என்பிஏ சாம்பியன், பயிற்சியாளராக ஒலிம்பிக் ஹால் ஆப்பேம் விருது உள்பட பல விருதுகளை வென்றுள்ளார். கூடைப்பந்து வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த இவருக்கு பலரும் தங்களுடைய இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.