ஓர் இந்திய சமூக சேவகரான அண்ணா ஹசாரே கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், வெளிப்படையான அரசாங்க செயல்பாடுகளை அதிகரிக்கவும், விசாரணை மற்றும் உத்தியோக ஊழல்களை தண்டிக்கவும் இயக்கங்கள் அமைத்தவர் ஆவார். அடிமட்ட இயக்கங்களை அமைக்கவும், சத்தியாக்கிரக போராட்டத்தை பலருக்கும் நினைவு படுத்தியது இவர் தான்.
இந்நிலையில் சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அண்ணா ஹசாரே விரைவில் குணமடைய முதல் உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.