முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக போக்குவரத்தை நீண்ட நேரம் நிறுத்தி வைக்க கூடாது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள மனோஜ் பாண்டே என்ற பள்ளியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஜனாதிபதி என்பதை தவிர்த்து நான் ஒரு உணர்வுபூர்வமான மனிதன். தான் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் நான் வருவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே போக்குவரத்து நிறுத்தப்படுவதை கவனித்து வருகிறேன். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அது மிகுந்த வேதனையை தருகின்றது.
எனவே முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சிக்காக நீண்ட நேரத்திற்கு முன்பு போக்குவரத்தை நிறுத்துவது சரி கிடையாது. பத்து அல்லது பதினைந்து நிமிடம் தான் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். அதேபோல் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களை தடுக்கக்கூடாது. எனது வாகனம் மட்டுமன்றி முதல் மந்திரியின் வாகனங்களின் அணிவகுப்பு சென்றால் கூட அதை நிறுத்திவிட்டு, ஆம்புலன்ஸ் செல்வதற்கு முதலில் வழிவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.