மிசோரமில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
மிசோரமில் உள்ள சாம்பை என்ற பகுதியில் இன்று காலை 6 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த வேல் நடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது.
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர்.ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.