Categories
தேசிய செய்திகள்

மிசோரம் மாநிலம்… கொரோனா பாதிப்பு இல்லை… ஒரு உயிரிழப்பு கூட இல்லாத அதிசயம்…!!!

மிசோரம் மாநிலத்தில் புதிதாக ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால், சில மாநிலங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில் வடகிழக்கு மாநிலமான மிசோரம் கொரோனா தடுப்பு பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் மிசோரம் மாநிலத்தில் தற்போது வரை ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.

இந்த நிலையில் மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. இது பற்றிய அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மிசோரம் மாநிலத்தில் 2,253 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை. மேலும் 2,148 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கருணா பாதிக்கப்பட்ட 105 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |