நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து முதலீடு செய்ய நினைத்தால் அதை PPF திட்டத்தில் முதலீடு செய்வதுதான் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இந்தியாவில் அதிக வட்டி வருமான வழங்கும் திட்டங்களில் PPF ம் ஒன்று. முதலில் இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால் அதிகமான வட்டி. இரண்டாவது சிறப்பம்சம் என்னவென்றால் 100% பாதுகாப்பான முதலீடு. 15 -20 வருடங்கள் வரை நீண்ட காலம் இப்படி ஒவ்வொரு மாதமும் சிறுக சிறுக முதலீடு செய்தால் மெச்சூரிட்டி காலத்தில் அதிக லாபம் கிடைக்கும். இது 15 வருட லாக்-இன் (Lock-in) பீரியடுடன் வருகிறது. மெச்சூரிட்டி பீரியடிற்கு பிறகு, திரட்டப்பட்ட வட்டியுடன் வருமானம் PPF அக்கவுண்ட் ஹோல்டருக்கு செலுத்தப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
1. PPF திட்டத்தில் மாதம் 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம்.
2. ஒவ்வொரு வருடமும் 15000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
3. சிறிய தொகையில் நீண்டகால முதலீடு செய்ய விரும்புவோருக்கு சிறந்தது.
4. வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் எளிமையாக PPF கணக்கு தொடங்கிவிடலாம்.
5. இத்திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 15 வருடங்கள். கூடுதலாக 5 வருடங்கள் வரை நீட்டித்துக்கொள்ளலாம்.
6. இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரி விதிக்கப்படாது. அதேபோல, வட்டி வருமானத்துக்கும் வரி விதிக்கப்படாது.