சேலம் மாவட்டத்தில் 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் கூலித்தொழிலாளி சுப்பிரமணி என்பவர் வசித்துவருகிறார். அவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் வசித்து வரும் ஏழு வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவர், அந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்போது சிறுமி அழுது கொண்டே தனது வீட்டிற்கு சென்றார். அதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர்கள், மகளிடம் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை அழுது கொண்டே திரும்பி கூறியுள்ளார்.
அதனைக் கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து, அங்கிருந்தவர்கள் அனைவரும் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பிறகு சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் தொழிலாளி சுப்பிரமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.