Categories
உலக செய்திகள்

மிதக்கும் ஆகாயக் கப்பலா….!!!! பிரபல நாட்டில் புதிய சாதனை….!!!!

சீனாவில் ஜிமு நம்பர் 1 என பெயரிடப்பட்ட மிதக்கும் ஆகாயக் கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டது. மேலும் இந்த கப்பல் 9 ஆயிரத்து 32 மீட்டர் உயரத்தில் சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கப்பலானது எவரெஸ்ட் சிகரத்தில் 4,300 மீட்டர் உயரத்திலுள்ள தளத்திலிருந்து வினாடிக்கு 30 மீட்டர் வேகத்தில் மேல் நோக்கி சென்று 9 ஆயிரத்து 32 மீட்டர் உயரத்தை எட்டியுள்ளது.

இச்சம்பவம் அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த கப்பலின் மூலம் அந்த இடத்தில் இருந்தபடியே, அதன்மீது பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவியானது, வளிமண்டல வாயுக்களை குறித்தும் மற்றும் வானில் நிகழும், நீராவி பரிமாற்றம் போன்ற தரவுகளைப் பதிவு செய்யும். இவ்வாறு சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |