வேட்டை தடுப்பு காவலரை காட்டுயானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பண்ணை பெட்டியில் இருக்கும் தனியார் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை தின்று நாசப்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வேட்டை தடுப்பு காவலர்கள் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு காட்டு யானை கோபத்தில் வேட்டை தடுப்பு காவலர்களை நோக்கி ஓடி வந்தது. இதனை பார்த்ததும் வேட்டை தடுப்பு காவலர்கள் அச்சத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
ஆனாலும் சுந்தரம் என்பவர் காட்டு யானையிடம் சிக்கிக்கொண்டார். இதனை அடுத்து காட்டு யானை சுந்தரத்தை துதிக்கையால் வீசி காலால் மிதித்து கொன்றது. இதனால் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.