நீர்வளத்துறை அமைச்சர் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கியுள்ளார்.
காட்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். தான் படித்த பள்ளிக்கு 70 ஆண்டுகளுக்கு பின்பு வந்ததால் அமைச்சர் மலரும் நினைவுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மின்சார இணைப்பு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் இருக்கையில் இருந்து எழுந்து மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்