மிதுனம் ராசி அன்பர்களே, இன்று தன லாபம் பன்மடங்கு அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். தொழில் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். இன்று கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிடம் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும்.
துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரவை பொருத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை, சிறப்பாகவே இருக்கும். வாக்குவாதத்தை மட்டும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். விளையாட்டை தயவுசெய்து ஓரங்கட்டி விடுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்