Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…கவனம் தேவை.. வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று கொஞ்சம் கவனமாகத்தான் இன்றைய நாளை நீங்கள் கழிக்கவேண்டும். வீண் பழிகளில் இருந்து ஓரளவு விடுபடுவீர்கள். வியாபாரம் ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். நீண்ட தூர பயணம் செல்ல வேண்டி இருக்கும். அதனால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். கையிருப்பு கூட கரையலாம். முக்கிய பணி நிறைவேற கொஞ்சம் தாமதமாகும்.

நலம் விரும்புவோரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். கூடுமானவரை பெரியோரிடம் ஆலோசனை கேட்டு சில முக்கிய காரியங்களை செய்யுங்கள். தொழில் வியாபாரம் செய்வதற்கு சில மாற்றங்களையும் செய்வீர்கள். அளவான பணவரவு தான் இன்று இருக்கும். தகுந்த ஓய்வு உடல்நலம் சீராக உதவும். அது மட்டுமில்லாமல் இன்று யாருக்கும் எந்தவித வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம்.

வாகனத்தில் செல்லும் போது நிதானமாக செல்லுங்கள். நீங்களும் பண கடன் வாங்க வேண்டாம், யாருக்கும் பணம் கடன் ஏதும் வாங்கி கொடுக்கவும்  வேண்டாம். மாணவச் செல்வங்கள் பொறுமையாகவே இருந்து கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு முயற்சி செய்யுங்கள். கூடுமானவரை படித்ததை எழுதிப்பாருங்கள், படித்ததை எழுதிப் பார்ப்பது தான் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை

Categories

Tech |