Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு.. குடும்பத்தில் அமைதி உண்டாகும்.. பணவரவு சிறப்பாகவே இருக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மனைவி, பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பூரிப்பும் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு சிறப்பாக அமையும். புதிய வீடுகட்டி குடிபோகும் யோகமும், வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும், உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் மறக்க முடியாத சம்பவங்களும் நடைபெறும். இன்று  எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உயர்வு தாழ்வு என்று எதையும் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய சூழல் இருக்கும். பணவரவும் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும்.

நிதி மேலாண்மையும் உங்களுக்கு நல்லபடியாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் காதலர்களுக்கு இன்று நல்ல நாளாகவே அமையும். இன்று  காதலர்கள்நல்ல நாளாகவே அமையும். திருமண முயற்சிகளை மேற்கொண்டால் ரொம்ப சிறப்பாகவே இன்றைய நாளில் நடக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வில் வெற்றி பெறக் கூடிய சூழலும் இருக்கும். நல்ல மதிப்பெண்களையும் இன்று பெறுவீர்கள். ஆனால் தேர்வு முடியும் வரை உணவு பழக்கவழக்க விஷயங்களில் ரொம்ப கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.

இரவில் தூங்கச் செல்வதற்கு முன் பசும்பால் அருந்தி விட்டுச் செல்லுங்கள், நீங்கள் படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு இது உதவும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |