Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…குடும்பத்தில் உங்கள் காய் ஓங்கி நிற்கும்.. நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேறும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  பழைய வேலையாட்களை மாற்ற கூடும்.  உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். கௌரவப் பதவிகள் கூட தேடி வரக்கூடும். பெரிய மனிதர்களின் தொடர்பும் தொண்டர்களின் ஆதரவும் அரசியல்வாதிகளுக்கு சிறப்பாகவே அமையும்.

வெளியூர் வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். மறைமுக வருவாய்கள் இன்று அதிகரிக்கும். அரசாங்கத்தாலும் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சின்னதாக பூசல்கள் வரக்கூடும். பேசும்பொழுது நிதானமாகவே பேசுங்கள், மனைவி சொல்வதை தயவு செய்து கேட்டுக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பிங்க் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்களின் வழிபாட்டையும் மேற்கொள்வது காரிய வெற்றிக்கு வழிவகுக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |