மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று கோபத்தால் குழப்பம் ஏற்படலாம். மனைவியின் கழகத்தால் உறவுகளுக்குள் சில பிரச்சனைகள் ஏற்படும், பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். இன்று புதிய தொழில் ஆரம்பித்த அவர்களுக்கு ஓரளவு சிறப்பான நாளாகவே இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு கண்டிப்பாக நல்ல நாளாக தான் அமையும்.
முதலீடுகளை திருப்பி எடுப்பதோடு மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் இன்று அள்ளிக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாகவே இன்று கிடைக்கக்கூடும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். கடன் பிரச்சனைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். மன குழப்பம் விலகி சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
நண்பர்களை வைரஸ் தொற்றின் காரணமாக மற்றவரிடமிருந்து நாம் இரண்டு மீட்டர் இடைவெளியில் நம்மளை தனிமைப்படுத்தி கொள்வது ரொம்ப நல்லது. இதன் மூலம் வைரஸ் தொற்று பரவாமல் நம்மால் தடுக்க முடியும். இந்த வைரஸ் தொற்றை முழுமையாக நாம் முற்றிலும் ஒழித்து விட பொதுமக்களாகிய நாம் கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கு, அதனால் கொஞ்சம் கவனமாகவே நாம் செயல்படுவோம்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்