மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லையே என்று கவலையும், ஆதங்கமும் இருக்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.உதவிகள் தேவைப்படும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். இன்று ஓரளவு எதிர்ப்புகள் விலகி செல்லும், கவலை வேண்டாம். பணவரவில் எந்தவித மாற்றமுமில்லை, நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ஆடை, ஆபரண சேர்க்கையும் உண்டாகும். இன்று கூடுமானவரை கொஞ்சம் பொறுமையை கையாளுங்கள், நிதானத்தை மேற்கொள்ளும் பொழுது கொஞ்சம் கவனமாகவே செய்யுங்கள். மாணவர்கள் படிக்கும் பொழுது படத்தை தயவு செய்து எழுதிப்பாருங்கள், தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மனதை உறுதிப்படுத்துதல், இரண்டு நிமிடம் இருந்து பின்னர் பாடங்களை படியுங்கள். தேர்வு முடியும் வரை காரமான உணவுகளை தவிர்த்துவிடுங்கள், பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள், இரவில் பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் இரவில் தூங்குவதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்வது ரொம்ப சிறப்பு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது ரொம்ப சிறப்பு, நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும. அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்றால் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்