மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் விவாதத்தை பற்றி பேசாதீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதலாகத்தான் அவகாசம் தேவைப்படும். செலவில் சிக்கனம் கண்டிப்பாக வேண்டும். பிள்ளைகளுடைய நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக் கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும்.
பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடப்பதற்கு வாய்ப்பு இருக்குங்க. கவலைப்படாதீர்கள் புதிய வீடு நிலம் கூட வாங்க கூடிய அமைப்பு இருக்கின்றது. பழைய வீட்டை நீங்கள் பழுது பார்க்கலாம். வாகனத்தை நீங்கள் சீர் செய்யலாம். இன்று உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். அதுபோலவே கணவன் மனைவிக்கு இடையே அன்பும் இருக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கு காதல் வெற்றிகரமாக நடந்து திருமணத்தில் முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தியே கொடுக்கும். அது போலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிறம்