மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் திடீர் திருப்பங்களும் ஏற்படும் நாளாகவே இருக்கும். அரசு உதவிகள், புதிய வேலை வாய்ப்புகளும் கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை இன்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடும். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியம் உங்களுக்கு அதிகமாக இருக்கச் செய்யும், குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் உங்களுக்கு சரியாகும், அனைத்து விஷயங்களுமே இன்று சாதகமாக முடியும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கொடுக்கல், வாங்களிலும் எந்த பிரச்சினையும் இல்லை.
உடல் ஆரோக்கியம் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். இருந்தாலும் பாடங்களை படிக்கும் போது கொஞ்சம் கவனமாக படியுங்கள். படித்ததை எழுதி பாருங்கள், தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் இரண்டு நிமிடம் தியானம் இருந்து பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது. படித்த பாடங்கள் உடனே மனதில் இருப்பதற்கு இது உதவும். அதுமட்டுமில்லை தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழ வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
இரவில் தூங்குவதற்கு முன் பாலில் அருந்தி விட்டுச் செல்லுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுபோலவே இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்