மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று கடந்த கடந்த இரண்டு நாட்களாக இருந்த தயக்கம், தடுமாற்றம் நீங்கும், குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள், தடைகள் உடைபடும் நாள் என்றே சொல்லலாம் . இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனைகளை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவது வருத்தங்கள் நீங்கும்.. பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்கு திருப்தி கொடுப்பதாகவே இருக்கும் இன்று கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள், காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். முடிந்தால் இன்று ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் தைரியமாக எதையும் செய்வார்கள்.
கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்