மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். வீடு கட்டும் முயற்சியில் வெற்றியை கொடுக்கும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கலாம். இன்று சிந்தனை மேலோங்கும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களை அனுசரித்து தான் செல்ல வேண்டும். அவர்களிடம் எந்தவித வாக்குவாதங்களும் இல்லாமல் கோபம் இல்லாமலும் இருப்பது ரொம்ப நல்லது.
பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலை அமையும். வேலைப்பளு அதிகரிக்கும். இதனால் உடல் சோர்வு ஏற்படும். உடல் நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள் வாகனச் செலவு என்று ஏற்படும் பராமரிப்பு செலவும் இன்றி ஏற்படும் இன்று செலவை மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
அனைத்து காரியங்களும் நல்லபடியாகவே நடக்கும். அதுமட்டுமில்லை இன்று விஷ்ணுபகவான் வழிபாட்டை இல்லத்தில் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் சலிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெளிர் பச்சை நிறம்