மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வீண் பேச்சை குறைப்பது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பும், விடாமுயற்சியும் தேவைப்படும்.பணவரவு சுமாராகவே இருக்கும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றுங்கள், உறவினர் நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும், மெத்தனமான போக்கே காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை இருக்கும். யாரிடமும் இன்று போன் பேசாதீர்கள்.
யாரையும் நின்று குறை சொல்லாதீர்கள். கூடுமானவரை வாக்குவாதத்தை தயவுசெய்து ஈடுபடாதீர்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கல்விக்காக கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். தேர்வு முடியும் வரை கொஞ்சம் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு உணவிலும் கட்டுப்பாட்டுடன் இருந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைப் எடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்
அதிஷ்ட எண்: 4 மற்றும் 6