மிதுனம் ராசி அன்பர்களே …! இன்று வாழ்வில் சிரமங்களை சரிசெய்ய திட்டமிடுவீர்கள். முயற்சிக்கான பலன் ஓரளவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வீர்கள். செலவில் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வாத உணவுகளை தயவுசெய்து தவிர்க்க வேண்டும். இன்று உங்களுடைய அறிவுத்திறன் நன்றாகவே இருக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.
பணவரவை பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். எடுத்த முயற்சி செயல்படுத்தும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்வது தான் ரொம்ப நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவுகளை மட்டும் எடுக்கவேண்டாம். பொறுமையாக இருங்கள். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். காதலர்கள் இன்று எந்த வித வாக்குவாதங்களும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கூடுமானவரை மற்றவர்கள் கூறுவதை கவனித்து அதற்கு ஏற்றார்போல் பதில் கூறுவதுதான் மிகவும் சிறப்பு.
இன்று கோபம் கொஞ்சம் தலைதூக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கோபத்தை தயவுசெய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்