Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு …எதிர் பார்த்த லாபம் கிடைக்கும் … கடன் பிரச்சனை தீரும் …!!..

மிதுனம் ராசி அன்பர்களே …!  இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் இனிய திருப்பங்களும் ஏற்படும்.  அரசு உதவிகள் புதிய வேலைவாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.  எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.  கடன் பிரச்சினைகள் தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்திறமை வெளிப்படும்.  மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.  எழுத்துத் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழ்ச்சிகள் நடக்கும்.  திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனை கொடுக்கும்.  கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும்.  இன்று பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.  உற்றார் உறவினர்களும் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள்.  அதுமட்டுமல்லாமல் வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கு.  ஆனால் வாகனத்தில் செல்லும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.  காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும்.

திருமணம் முயற்சிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.  அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள்  கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுத்தால் உங்களுடைய கர்ம வினைகளிலிருந்து நீங்கள்  காத்துக் கொள்ளலாம்.

 அதிஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |