மிதுனம் ராசி அன்பர்கள்..!! இன்று குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். ஆடம்பர செலவுகளை மட்டும் தயவுசெய்து குறைத்து சேமிக்கத் தொடங்குங்கள். நட்பால் ஆதாயம் ஓரளவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் புதிய அதிகாரிகள் உங்களை மதிக்க கூடும். புத்திக்கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். செலவு கொஞ்சம் கட்டுக்கடங்காமல் இன்று செல்லும். வேண்டியவர்களுடன் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து செல்லும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக தான் உழைக்க வேண்டி இருக்கும்.
கடன் பிரச்சினைகளைப் பொறுத்தவரை கட்டுக்குள் இருக்கும். போட்டிகளும் எதிர்ப்புகளும் நீங்கிச் செல்லும். உங்களை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படும் அதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று யாருக்கும் பஞ்சாயத்துக்கள் மட்டும் ஏதும் பண்ண வேண்டாம். இன்று மாணவர்கள் கல்விக்காக கடினமாக உழைப்பார்கள் நல்ல முன்னேற்றத்தையும் அதுபோலவே அடைவார்கள். முடிந்தால் படித்த பாடத்தை மட்டும் ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பது சிறப்பாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்