Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு … மரியாதை உயரும் … வாக்கு வன்மையால் புகழ் சேரும் …!!

மிதுனம் ராசி அன்பர்களே…!  இன்று பயணங்கள் செல்வதாக இருந்தால் கொஞ்சம் கவனமாகவே மேற்கொள்ளுங்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் செல்லுங்கள் அது போதும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் எந்த முடிவும் எடுக்கும் பொழுது குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். சமூகத்தில் மரியாதை உயரும் பணம் பல வழிகளிலும் கிடைக்கும் .அதே நேரத்தில் செலவும் இருக்கும் . வாக்கு வன்மையால் புகழ் கூடும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன் வசூல் ஆகும். புதிய நபர்களை நம்பி எதையும் செய்யும் பொழுது கவனமாக இருங்கள்.. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். தயவுசெய்து இன்று குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாகத்தான் இருக்கும். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாகவே இருக்கும்.

கொடுக்கல் வாங்கலும் ரொம்ப நல்ல படியாகவே இன்று இருக்கும். எந்த விதத்திலும் இன்று உங்களுக்கு கவலை வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது  ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.  அதுபோலவே இன்று குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் :  பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |