Categories
மாநில செய்திகள்

‘மித்ரா’விற்கான மருத்திற்கு இறக்குமதி வரி ரத்து…. நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு…!!!

அரியவகை மரபணுக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்ட நாமக்கல்லை சேர்ந்த குழந்தை ‘மித்ரா’விற்கான மருத்தை இறக்குமதி செய்வதற்கான வரி ரத்து செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த பெண் குழந்தை மித்ரா. 2 வயதேயான இவர் ஸ்பைனல் மஸ்குலர் ஆட்ரோஃபி (Spinal muscular autrophy) என்ற அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டார். அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்க 16 கோடி ரூபாய் தேவைப்பட்டது. சிறுமி மித்ராவின் நிலையைக் கண்டு மனமுறுகிய பலர் நிதியுதவி அளித்த நிலையில், சிறுமியின் சிகிச்சைக்கு தேவையான 16 கோடி ரூபாய் நிதி கிடைத்துவிட்டது. எனினும், மித்ராவுக்கு அளிக்கப்பட உள்ள மருந்தை இறக்குமதி செய்ய கூடுதலாக 6 கோடி ரூபாய் தேவைப்பட்டது.

அதை திரட்ட முடியாத பெற்றோர் வரிவிலக்கு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மித்ராவின் மருந்துக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. அதன்படி மருத்தை இறக்குமதி செய்வதற்கான வரி ரத்து செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |