ஆக்சிஸ் வங்கியானது மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
தனியார் வங்கியான ஆக்சிஸ் பேங்க் மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தியுள்ளது. மேலும் பல்வேறு சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தொகை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலவச பண பரிவர்த்தனையும் மாதத்துக்கு இரண்டு லட்சம் ரூபாயில் இருந்து 1.5 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நகர்ப்புறங்களில் மினிமம் பேலன்ஸ் தொகை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மினிமம் பேலன்ஸ் தொகை எனப்படும் குறைந்தபட்ச தொகையை கட்டாயம் வாடிக்கையாளர்கள் பராமரிக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வகைகளுக்கு ஏற்ப மினிமம் பேலன்ஸ் வேறுபடும். மேலும் மினிமம் பேலன்ஸ் சரியாக பராமரிக்காவிட்டால் அதற்கான அபராத தொகையை வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டும். அது மட்டுமில்லாமல் மினிமம் பேலன்ஸ் தொகையானது வாடிக்கையாளர்களின் ஊருக்கு ஏற்பவும், வங்கி கணக்கின் வகைக்கு ஏற்ப வேறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.