தனியார் வங்கியான யெஸ் வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் துவங்கி ஏடிஎம், பணப்பரிவர்த்தனை கட்டணம் என அனைத்து வகையான கட்டண முறையிலும் திருத்தம் செய்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதியில் இருந்த இந்த புதிய திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. யெஸ் பேங்கின் ஆன்லைனில் இம்மாற்றங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
டெபிட்கார்டு கட்டணங்கள்
முதல் 5 பரிவர்த்தனைகளை மாதத்துக்கு கட்டணம் எதுவும் இன்றி வழங்குகிறது (நிதி மற்றும் நிதிஅல்லாதது). அதன்பின் நடக்கும் ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் 21 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூபாய்.10. இந்தியாவுக்கு வெளியேயுள்ள ஏடிஎம்களிலிருந்து பணம் எடுப்பதற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 120 மற்றும் பேலன்ஸ் விசாரணைக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் 20. போதுமான பணமில்லாததால் ஏ.டி.எம் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் யெஸ் வங்கியானது ஒருநிகழ்வுக்கு ரூ.25 விதிக்கிறது. வங்கிகிளை ஏ.டி.எம் வாயிலாக கார்டுபின்னை மீண்டுமாக உருவாக்குவதற்கு ஒரு நிகழ்வுக்கு ரூபாய் 50 கட்டணமாக விதிக்கும். தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட டெபிட் கார்டுகளை மாற்றுவதற்கு ரூபாய் 199 கட்டணமாகச் செலுத்தவேண்டும்.
RTGS, NEFT, IMPS கட்டணங்கள்
# கிளை வாயிலாக RTGS செலுத்துவதற்கு ரூபாய் 2 லட்சம் -ரூ 5 லட்சம் வரையிலான பரிவர்த்தனை தொகைக்கு, ரூ.20 மற்றும் ரூ 5 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனை தொகைக்கு ரூ.40 கட்டணம்.
# கிளை மூலமாக NEFT செலுத்துவதற்கு ரூபாய் 10,000-க்கும் குறைவான பரிவர்த்தனை தொகைக்கு ரூ.2, ரூ 10,000 முதல் ரூ 1 லட்சம் வரையிலான பரிவர்த்தனை தொகைக்கு ரூ.4 கட்டணம்.
# IMPS: ரூபாய். 1 லட்சம் வரையிலான பரிவர்த்தனை தொகைக்கு ரூபாய் 5 மற்றும் ரூ.1 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பரிவர்த்தனை தொகைக்கு ரூ.15 கட்டணம் செலுத்த வேண்டும்.
அக்கவுண்ட்பேலன்ஸ்
SA Pro Plus, YES Respect SA (மூத்த குடிமக்களுக்கு), Yes Essence SA (பெண்களுக்கு) இவ்வகையான சேமிப்பு கணக்குகளுக்கு மாதாந்திர சராசரி இருப்புத்தொகை ரூபாய். 25,000 இருக்கவேண்டும். சேமிப்பு கணக்கு PROல் ரூ.1000 பேலன்ஸ், SA / Kisan SA (விவசாயிகளுக்கு) ) கணக்கில் ரூ. 5,000 மற்றும் SA (மைனர்கள்) கணக்கில் ரூ. 2,500 மினிமம் பேலன்ஸாக பராமரிக்க வேண்டும்.