தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக்களுக்கு பணி நியமனம் தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மினி கிளினிக்களுக்கு மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் பணி நியமனம் குறித்து தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.