மினி பஸ் மோதியதில் தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மீனம்பட்டி பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் பால்ராஜ் மீது மோதியுள்ளது.
இதில் அவருக்கு படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய மினி பஸ் டிரைவர் ஆன கருப்புசாமி மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.